மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மந்தம்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது.

இந்த கதவணையில் சேமிக்கப்படும் காவிரி நீரில், மீன்கள் வளர்க்கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்துக்கொண்டு வந்து விற்று வருகின்றனர்.இதில், ஜிலேபி மீன் ஒரு கிலோ, 140 ரூபாய், கெண்டை, 80 ரூபாய், கொக்கு மீன், 230 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், புலியூர், சேங்கல், திருக்காம்புலியூர், மாயனுார், லாலாப்பேட்டை பகுதிகளை சேர்ந்த மக்கள் மீன்களை வாங்கி சென்றனர். புரட்டாசி மாதம் முடிய இன்னும் ஒரு வாரம் உள்ளதால், மீன் விற்பனை சற்று மந்தமாகவே நடந்தது.

Advertisement