போலீசாருக்கு ஆலோசனை முகாம்

கரூர்,:கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், போலீசாருக்கு பணிகள் தொடர்பாக ஆலோசனை முகாம் நடந்தது.

அதில், சட்டம் - ஒழுங்கை பராமரித்தல், பொதுமக்களின் புகார்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்தல், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துதல், சைபர் குற்றங்களை கையாளுதல், குற்ற தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் குறித்து, எஸ்.பி., ஹரிகிரண் பிரசாத் விளக்கமளித்து பேசினார். முகாமில், ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் பங்கேற்றனர்.

Advertisement