திருவதிகையில் கழிவுநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
பண்ருட்டி: திருவதிகையில் கழிவுநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முயன்ற மக்கள், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை ஏற்று கலைந்து சென்றனர்.
பண்ருட்டி நகராட்சி பகுதி கழிவுநீர் அனைத்தும், வாலாஜா வாய்க்கால் மூலம் கெடிலம் ஆற்றில் கலந்து வருகிறது. அதனை தடுக்கும் பொருட்டு, திருவதிகை வாலாஜா வாய்க்காலில் சேரும் கழிவுநீரை, அங்கே தொட்டி கட்டி அதில் சேமித்து, ராட்சத குழாய் மூலம், கெடிலம் ஆற்றங்கரையில் கட்டப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
அதனையொட்டி, நேற்றுமுன்தினம் பண்ருட்டி– பாலுார் மெயின்ரோட்டில் திருவதிகையில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டி அருகில் கழிவு நீர் சேமிக்க தொட்டி கட்ட பள்ளம் தோண்டப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடிநீர் தொட்டி அருகே கழிவு நீரை சேமித்தால் நிலத்தடி நீர் வீணாகும் எனக் கூறி நேற்று காலை 9 மணிக்கு சாலைமறியலில் ஈடுபட திரண்டனர்.
அவர்களிடம், நகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கழிவு நீர் தேக்க தோண்டிய பள்ளத்தை மூடி, வேறு இடத்தில் தொட்டி கட்டுவதாக கூறியதை ஏற்று, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மேலும்
-
பயங்கரவாதியே, ஏன் இங்கு வந்தாய்; நியூயார்க்கில் முகமது யூனுஸ்க்கு கடும் எதிர்ப்பு
-
மின்னணு பண பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம்
-
விவசாயிகளின் விவரங்களை துல்லியமாக பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை
-
தாசில்தார், சார் பதிவாளருக்கு ‘பிடிவாரண்ட்’ திட்டக்குடி சப் கோர்ட் நீதிபதி அதிரடி
-
கொலை வழக்கில்மேலும் ஒருவர் கைது
-
சில்லறை விற்பனை டீசல் பங்க் கோரி பழையாரில் 2 வது நாளாக போராட்டம்