எம்.எல்.ஏ., பிறந்த நாள் அமைச்சர் நேரில் வாழ்த்து

வில்லியனுார்: நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ., விக்னேஸ்வரன் பிறந்தநாள் விழாவில் உள்துறை அமைச்சர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

விக்னேஸ்வரன் எம்.எல்.ஏ., தனது பிறந்தநாள் விழாவை நெடுங்காட்டில் உள்ள வீட்டில் ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சி தலைவர் நாஜீம், எம்.எல்.ஏ.,க்கள் திருமுருகன், மீனாட்சிசுந்தரம், உறுவையாறு ராமச்சந்திரன், இளமுருகன் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் அன்பழகன், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ரவிக்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.

பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெடுங்காடு தொகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Advertisement