கடலுாரில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் ஈரோடு வாலிபர்கள் 3 பேர் கைது
கடலுார்: கடலுார் முதுநகர் ரயில் நிலையம் அருகே 5 கிலோ கஞ்சாவுடன் திரிந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் முதுநகர் ரயில் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது, ரயில் நிலையம் தண்ணீர் தொட்டி அருகில் சந்தேகிக்கும் நின்றிருந்த மூவரை பிடித்து சோதனை செய்ததில், 5 கிலோ கஞ்சா வைத்திருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சவுந்தர் 36; ஜாபர் ஷெரீப் 32:, கெய்சர் 26: மூவரும், திருப்பதிக்கு சென்று வரும்போது விற்பனைக்காக ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்தது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார், வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதியே, ஏன் இங்கு வந்தாய்; நியூயார்க்கில் முகமது யூனுஸ்க்கு கடும் எதிர்ப்பு
-
மின்னணு பண பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம்
-
விவசாயிகளின் விவரங்களை துல்லியமாக பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை
-
தாசில்தார், சார் பதிவாளருக்கு ‘பிடிவாரண்ட்’ திட்டக்குடி சப் கோர்ட் நீதிபதி அதிரடி
-
கொலை வழக்கில்மேலும் ஒருவர் கைது
-
சில்லறை விற்பனை டீசல் பங்க் கோரி பழையாரில் 2 வது நாளாக போராட்டம்
Advertisement
Advertisement