உச்சநீதிமன்றம் நோக்கி இன்று ராகுல் பேரணி: டில்லியில் 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்
புதுடில்லி: தலைநகர் டில்லியில் உச்ச நீதிமன்றத்தை நோக்கி எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி, இன்று பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து, மத்திய டில்லி பகுதியில் உள்ள 6 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் வழக்கமான அலுவலக பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
போராட்டக் களம்:
தேர்தல் கமிஷன் மற்றும் வாக்குப்பதிவு விவகாரங்களை முன்னிறுத்தி, 'இண்டி' கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நோக்கி இன்று பிரம்மாண்ட பேரணி நடத்த அழைப்பு விடுத்துள்ளன. மதியம் கன்னாட் பிளேஸ் - பாராகம்பா சாலை சந்திப்பில் ஒன்று கூடி பேரணியாகச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கெடுபிடி:
போராட்டக்காரர்கள் பெருமளவில் கூடுவதைத் தடுக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் டில்லி போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, மத்திய டில்லி வழித்தடத்தில் உள்ள 6 முக்கிய மெட்ரோ நிலையங்களில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பயணிகள் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் அடைக்கப்பட்டு, சேவை முடக்கப்பட்டுள்ளது. ரயில் மாறும் வசதிகள் மட்டும் வழக்கம் போல செயல்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் திண்டாட்டம்:
திங்கட்கிழமை காலை வேலைக்குச் செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரும் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதால் மாற்று வழித்தடங்களை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். மத்திய டில்லிக்கு வரும் பயணிகள் இந்த கட்டுப்பாடுகளை கவனத்தில் கொண்டு பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டில்லி முழுவதும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ராவுள் கான் மற்றும் மமதை குல்லா அகிலேஷ் ஆகியோர் தீவிரவாதிகளாக சிதைக்காமல் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் அறை அவர்களின் வீடுகளை நோக்கி பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பு விலக்கி வைக்க வேண்டும். இவர்கள் நமது தலைவர்கள் தானே. பின் எதற்காக இவ்வளவு கெடுபிடிகள்...koligium கலைக்கப்பட்டு cjp கரப்பான் களை அனைத்து நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்க வேண்டும். அடுத்த ஜனாதிபதியாக அபிஜித் நியமிக்கலாம். தனது பாகிஸ்தான், அமெரிக்கா, சிரியா, ஹவுதி ஹமாஸ் தொடர்புகளை பயன்படுத்தி இந்தியாவை உலகிலேயே நம்பர் ஒன் ஆக மாற்றுவார்.
நீதிமன்ற நிபந்தனைகளை மீறி தொடர்ந்து கலவரம் ஏற்படுத்தும் இவனது ஜாமீனை உச்சநீதிமன்றம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
ராகுல், எதிர் கட்சிகள் நோக்கி மக்கள் பிரமாண்ட பேரணி நடத்தினால் தான் விடிவு. வேலை செய்து பிழைக்க முடியும். சட்டமே சிக்கலில் மாட்டிக்கொண்டு வருகிறது.
ராணுவம், தேர்தல் ஆணையம் வரிசையில் மூன்றாவது நீதிமன்றம் அடுத்து ராஷ்டிரபதி பவன். மக்களை இம்சித்து போராட்டம் செய்வது எப்படி இருக்கிறது என்றால், மனைவியை அடித்து சோறு போடு என்று கேட்பது போல் இருக்கிறது.
ராகுல் இந்தியாவை அழிக்காமல் விட மாட்டார் . எலான் மஸ்க் டிரம்ப் ஆகியோரிடம் காசு வாங்கி கூவும் கும்பலின் தலைவன்மேலும்
-
திருநங்கைகள், பெண்களுக்காக வருகிறது பிங்க் இ-ஆட்டோ திட்டம் ; டில்லி அரசு அறிமுகம்
-
வாக்காளர் பட்டியலில் பகத்சிங் படம்: வெடித்தது புதிய சர்ச்சை
-
அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் துக்காராமுக்கு கூடுதல் பொறுப்பு; அரசு அமைத்த குழுவில் செயலாளராக நியமனம்
-
தமிழை போற்றும் மோடி; பிரிவினையை தூண்டும் ராகுல்!: பா.ஜ., கடும் குற்றச்சாட்டு
-
தம்மாம் ஏர்போர்ட் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல்: சவுதி அரேபியாவில் பதற்றம்
-
எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நிறுத்தம்; அதிபர் டிரம்ப் தலையீடுக்கு பிரிட்டன் ஆதரவு