இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு முக்கியம்: ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
புதுடில்லி: இந்திய மாலுமிகளின் பாதுகாப்பும் நலனும் மிக முக்கியம் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கை: ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம்.
'எம்டி பெட்ரோ டால்பின்' கப்பல் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன; மார்ஷல் தீவின், இந்த டேங்கர் கப்பல் அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது பொருளால் தாக்கப்பட்டதில், கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகளில் இருவர் காணாமல் போயுள்ளனர். 11 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
காணாமல் போன இந்தியர்களை மீட்பதற்கும், இந்தியக் குழுவினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் ஓமன் நாட்டு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்திய மாலுமிகளின் பாதுகாப்பும் நலனும் இந்திய அரசுக்கு மிக முக்கியமாகும். இப்பகுதியில் வணிகக் கப்பல் போக்குவரத்து மீது மீண்டும் மீண்டும் நடத்தப்படும் தாக்குதல்கள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன; ஏற்கனவே பதற்றமான சூழலை இவை மேலும் தீவிரமடையச் செய்யும் அபாயத்தைக் கொண்டுள்ளன.
பதற்றத்தைத் தணிக்கவும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகள் மூலம் தற்போதைய மோதலுக்குத் தீர்வு காணவும் வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது. வணிகக் கப்பல்கள், மாலுமிகள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் மற்றும் பாதுகாப்பான, தடையற்ற கடல்சார் வர்த்தகம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
'கிரானைட்' வீரமணி வழக்கு: கூடுதல் டிஜிபி அருணிடம் விசாரணை
-
பெற்றோருடன் தகராறு: சிறுமியை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற கொடூர காவலாளி
-
நான்கு ஆண்டாக ‘டிமிக்கி’ கொடுத்தவர் கைது
-
எஸ்.சி., - எஸ்.டி., இடஒதுக்கீடு அதிகரிப்பு: கர்நாடக அரசு உத்தரவு ஐகோர்ட்டில் ரத்து
-
ஹார்முசில் 2 கப்பல்கள் மீது தாக்குதல் 20 இந்திய மாலுமிகள் மீட்பு; 2 பேர் மாயம்
-
வறட்சியின் தாகம்: மேதவாச்சியாவின் கண்ணீர்