துவங்கியது நவராத்திரி கொண்டாட்டம்; பாரம்பரிய நடனமாடி பக்தர்கள் மகிழ்ச்சி
ஆமதாபாத்: ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா, குஜராத்தில் நேற்று கோலாகலமாக துவங்கியது. ஆமதாபாத்தில் சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்த விழாவை முதல்வர் பூபேந்திர படேல் துவங்கி வைத்தார். மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பெண்களால் நடத்தப்படும் சகி மண்டல்களின் சார்பில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் கண்காட்சியையும் அவர் திறந்து வைத்தார்.
பிரதமர் மோடி அரசு பதவிகளை வகித்து 25 ஆண்டை நிறைவு செய்வதை குறிக்கும் விதமாக, இந்த ஆண்டின் நவராத்திரி திருவிழா தனித்துவமானது என்று முதல்வர் குறிப்பிட்டார்.
9 நாள் நடக்கும் இந்த விழாவில், துர்க்கை அம்மனின் ஒன்பது அவதாரங்களையும் வழிபாடு நடத்தப்படும். புகழ்பெற்ற அம்பாஜி கோவில், பவாகாத்தில் உள்ள மகா காளி கோவில் மற்றும் கட்ச்சில் உள்ள மாதா நா மாத் போன்ற முக்கிய தேவி கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முதல்நாளான நேற்றிரவு, பக்தர்கள் பாரம்பரிய நடனமான கர்பா நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நவராத்திரி விழாவையொட்டி, குஜராத்தில் கர்பா மைதானங்களில் சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும்
-
பயங்கரவாதியே, ஏன் இங்கு வந்தாய்; நியூயார்க்கில் முகமது யூனுஸ்க்கு கடும் எதிர்ப்பு
-
மின்னணு பண பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம்
-
விவசாயிகளின் விவரங்களை துல்லியமாக பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை
-
தாசில்தார், சார் பதிவாளருக்கு ‘பிடிவாரண்ட்’ திட்டக்குடி சப் கோர்ட் நீதிபதி அதிரடி
-
கொலை வழக்கில்மேலும் ஒருவர் கைது
-
சில்லறை விற்பனை டீசல் பங்க் கோரி பழையாரில் 2 வது நாளாக போராட்டம்