விழுப்புரம், கண்டமங்கலம் கோட்டத்தில் சூரிய வீடு மின்சார திட்ட விழிப்புணர்வு முகாம்

கண்டமங்கலம்: பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் விழுப்புரம் மற்றும் கண்டமங்கலம் மற்றும் திண்டிவனம் கோடட்டங்களில் நாளை அக்.14ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மான கழக விழுப்புரம் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;

பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் விழுப்புரம் , கண்டமங்கலம் மற்றும் திண்டிவனம் கோடட்டங்களில் நாளை அக்.14ம் தேதி நடைபெறுகிறது.

சூரிய சக்தியை பயன்படுத்தி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டமான பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்.29ஆம் தேதி துங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் இதுவரை 1666 பேர் பயன் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தில் பணிகள் நிறைவுற்ற ஏழு நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை நேரடியாக செலுத்தப்படும்.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:

ஒரு கிலோ வாட் மத்திய அரசின் மானியத் தொகை ரூ. 30,000 மாநில அரசின் மானிய தொகை ரூ. 5,000 மொத்த மானியத் தொகை ரூ.35,000 , 2 கிலோ வாட்டுக்கு மத்திய அரசின் மானியத் தொகை ரூ.60,000 மாநில அரசின் மானியத் தொகை ரூ.10,000 மொத்த மானியத் தொகை ரூ. 70,000.

3 கிலோ வாட்டுக்கு மத்திய அரசின் மானிய தொகை ரூ.78,000, மாநில அரசின் மானிய தொகை ரூ.22,000, மொத்த மானியத் தொகை ரூ. 1 லட்சம்.மேலும் கடந்த செப். 5ம் தேதி முதல், வரும் 2027 மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியம் வழங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் சிறப்பு முகாம்களில் விண்ணப்ப பதிவு மற்றும் ஆலோசனைகள் நடைபெற உள்ளது. எனவே இம்மகாம்களில் கலந்து கொண்டு சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விழுப்புரம் கோட்டத்திற்கான முகாம் நாளை 14ஆம் தேதி காலை 10;00 மணி முதல் மதியம் 1;00 மணி வரை விழுப்புரம் திருச்சி மெயின் ரோடு வீரன் கோவில் எதிரே உள்ள பாலமுருகன் மஹாலில் நடைபெறுகிறது.

கண்டமங்கலம் கோட்டத்திற்கான சிறப்பு முகாம் நாளை 14ம் தேதி, திருச்சிற்றம்பலம் திருப்பதி மஹாலில் காலை 10;00 மணி முதல் பகல் 1;00 மணி வரை நடைபெறுகிறது. அதேபோல் திண்டிவனம் கோட்டத்திற்கான சிறப்பு முகாம் 14ம் தேதி திண்டிவனம் சென்னை ரோடு கே.ஆர்.எஸ் அம்மா மஹாலில் காலை 10;00 மணி முதல், பகல் 1;00. மணி வரை நடைபெறுகிறது.

தேவையான ஆவணங்கள்:

இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் அவசியம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மின் இணைப்பு அட்டை அல்லது மின் கட்டண ரசீது எடுத்து வர வேண்டும். முகாமில் பங்கேற்று விண்ணப்பித்து தங்கள் வீடுகளில் சூரிய தகடுகளை பொருத்திக் கொள்ளலாம். மேலும் www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.

Advertisement