மாநில பெண்கள் கபடி போட்டி

கமுதி: கமுதி அருகே தோப்படைப்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் புரட்டாசி மாதம் எருதுகட்டு, பொங்கல் விழாவில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி நடந்தது. காரைக்குடி, திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 அணிகள் கலந்து கொண்டனர். ப்ரோ கபடி விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. போட்டி செயற்கை ஆடுகளத்தில் நடந்தது.

முடிவில் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் அணி ரூ.60 ஆயிரம் முதல் பரிசு, தென்காசி அணி ரூ.40 ஆயிரம் இரண்டாம் பரிசு, நெல்லை அணி ரூ.30 ஆயிரம் மூன்றாம் பரிசு, திருச்சி அணி ரூ.25 ஆயிரம் நான்காம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்திய கபடி வீரர் மணத்தி கணேசன் ரொக்கப்பரிசு, கோப்பைகள் வழங்கினார்.

போட்டியை கமுதி, முதுகுளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பார்த்தனர்.ஏற்பாடுகளை தோப்படைப்பட்டி கிராம மக்கள், இளைஞர்கள் செய்தனர்.

Advertisement