காமராஜர் அரசு கல்லுாரியில் கிராமிய நிகழ்ச்சி

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக் கல்லுாரியில் வாணிதாசன் படைப்புகள் என்ற தலைப்பில் கிராமிய நிகழ்ச்சி நடந்தது.

டில்லி சாகித்திய அகாதெமி மற்றும் புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக் கல்லுாரியின் தமிழ்த்துறையும் இணைந்து வாணிதாசன் படைப்புகள் என்ற தலைப்பில் கிராமிய நிகழ்ச்சி நடந்தது.

சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் பூபதிபெரியசாமி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கதிர்வேல் கலை விழாவை துவக்கி வைத்து பேசினார்.

தொடர்ந்து வாணிதாசன் குழந்தை இலக்கியம் என்ற தலைப்பில் சீனுவேணுகோபால், வாணிதாசன் கவிதைகளில் பகுத்தறிவு என்னும் தலைப்பில் நெய்தல்நாடனும், வாணிதாசனின் 'அறநெறி ஆத்திசூடி என்ற தலைப்பில் கோவிந்தராசுவும், வாணிதாசன் கவிதைகளில் பெண்ணியம் எனும் தலைப்பில் வளர்மதிமுருகனும் கருத்துரை வழங்கி பேசினர்.

முடிவில் கல்லுாரி தமிழ்த் துறைத் தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை கல்லுாரி மாணவி பவிசிறீ தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் பூபதி அறக்கட்டளை செயலர் பத்மநாபன் , இணைச்செயலர் சிவராமன், வாணிதாசனாரின் மகள் ஐயை, மகன் பெருங்கிள்ளி, பேரன் பொன்முருகன் மற்றும் தமிழ்த்துறை மாணவர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் விவேகானந்தன், ரஞ்சன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement