தலைமைச் செயலகத்தில் மின்தடை ஏற்பட்டது ஏன்? மின்வாரியம் சொல்லும் காரணம் இதுதான்!
சென்னை: தலைமைச் செயலகத்தில் மின்தடை ஏற்பட்டது ஏன் என்று தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்த அறிக்கை:
சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் முதல் தளத்தில் சில பகுதிகளில் மட்டும் இன்று (அக்12) காலை மின்விநியோகத்தில் தற்காலிகத் தடை ஏற்பட்டது. மற்ற அனைத்து தளங்களிலும் மின் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி இயல்பாக இருந்தது.
தலைமைச் செயலக வளாகத்திற்குள் உள்ள மின் விநியோகக் கட்டமைப்புகள் பொதுப்பணித் துறையின் (கட்டடங்கள்) பராமரிப்பில் உள்ளன. முதல் தளத்திற்கு மின்சாரம் வழங்கும் நான்கு மின் சுவிட்சுகளில், ஒரு சுவிட்ச் உடைய பி-பேஸ் (B-Phase) மின் விநியோகத்தில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட மின் சுவிட்சில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்து, மின் விநியோகத்தை மீண்டும் சீரமைத்தனர்.
இதனையடுத்து, காலை 11.25 மணியளவில் முதல் தளத்தில் இயல்பான மின்விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தின் அனைத்து தளங்களிலும் தற்போது மின்விநியோகம் சீராக உள்ளது.
இவ்வாறு தமிழ்நாடு மின்வாரியம் கூறி உள்ளது.
திமுக தான் காரணம் என்று சொல்ல வேண்டியது தானேமேலும்
-
தமிழகத்திற்கு நீர் விடுவிப்பது கடினம்; காவிரி விவகாரத்தில் கர்நாடகா பிடிவாதம்
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ்., மங்ரோல்' நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் கடற்படையில் சேர்ப்பு
-
பாஜ ஆட்சிக்கு வந்தபின் முதல் நவராத்திரி : மேற்கு வங்கம் முழுவதும் விழாக்கோலம்
-
கலப்படமான உணவு, தரமற்ற மருந்துகளுக்கு எதிரான போராட்டம் தொடரும்; துக்காராம் உறுதி
-
அரசு முத்திரை, போலி சான்றிதழ்கள் தயாரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பலே’ மோசடி: எர்ணாவூரைச் சேர்ந்த 6 பேர் கும்பல் சிக்கியது
-
‘மனதுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து சாதிக்கணும்’