பாஜ ஆட்சிக்கு வந்தபின் முதல் நவராத்திரி : மேற்கு வங்கம் முழுவதும் விழாக்கோலம்
- நமது நிருபர்-
மே .வங்கத்தில் நவராத்திரி திருவிழா, துர்கா பூஜை என்ற பெயரில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் அந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவி வழிபாடே, முதன்மை வழிபாடாக மாறுகிறது. ஒவ்வொரு தெருவிலும், தற்காலிகமாக, தத்ரூபமான கலைநயத்துடன் கூடிய மாபெரும் பந்தல்கள் அமைக்கப்படும். உலக அதிசயங்களின் வடிவங்கள் அல்லது நடப்பு சமூகக் கருத்துக்களை மையமாகக் கொண்டு, இந்த பந்தல்கள் வடிவமைக்கப்படும். இங்கு, களிமண்ணால் செய்யப்பட்ட பிரமாண்டமான துர்கா தேவி, அரக்கன் மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சியளிப்பார்.
ஆனால், கம்யூனிஸ்ட் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பிரம்மாண்ட விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பந்தல் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கடந்த 49 ஆண்டுகளாக, நவராத்திரி கொண்டாட்டம் பெயரளவுக்கு மட்டுமே இருந்து வந்தது.
தற்போது பாஜ மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள நிலையில், துர்கா பூஜையை விமரிசையாக கொண்டாட முதல்வர் சுவேந்து அதிகாரி முடிவு செய்தார். முன்பு போல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. பந்தல் அமைக்க எளிதில் அனுமதி கிடைக்கிறது.
கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டிரோன் ஷோக்கள், லேசர் ஒளி காட்சி, கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
மாநிலம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலை காணப்படுகிறது.
கோல்கட்டாவில் உள்ள அனைத்து மேம்பாலங்களும், பிரபலமான கட்டடங்களும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டடன. இது குறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. முன்பு போல் கட்டுப்பாடு விதிக்காமல் அனுமதி வழங்கப்படுவதற்கு மாநில அரசுக்கு நன்றி தெரிவித்து சமூக ஊடகங்களில் வைரலாகியது.
மேலும்
-
தமிழகத்திற்கு நீர் விடுவிப்பது கடினம்; காவிரி விவகாரத்தில் கர்நாடகா பிடிவாதம்
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ்., மங்ரோல்' நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் கடற்படையில் சேர்ப்பு
-
கலப்படமான உணவு, தரமற்ற மருந்துகளுக்கு எதிரான போராட்டம் தொடரும்; துக்காராம் உறுதி
-
அரசு முத்திரை, போலி சான்றிதழ்கள் தயாரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பலே’ மோசடி: எர்ணாவூரைச் சேர்ந்த 6 பேர் கும்பல் சிக்கியது
-
‘மனதுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து சாதிக்கணும்’
-
'கிரானைட்' வீரமணி வழக்கு: கூடுதல் டிஜிபி அருணிடம் விசாரணை