‘மனதுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து சாதிக்கணும்’
கோவை: பி.கே.தாஸ் நிகர்நிலை பல்கலை தொழில்நுட்ப பள்ளி, நேரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் விமானவியல் பொறியியல் துறை, இந்திய விமானவியல் சங்கம் சென்னை கிளை சார்பில், ஏ.இ.எஸ்.ஐ., வாய்ப்புகளின் இறக்கைகள் 2026 தொழில்நுட்ப அறிவும் தொழில்முறை பாதைகளும்’ என்ற தலைப்பில், மாநாடு நடந்தது.
‘இஸ்ரோ’ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் பேசுகையில், ‘‘சமூக அழுத்தங்களுக்கு அடிபணியாமல், மனதுக்கு பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து இலக்கை நோக்கி விடாமுயற்சியுடன் பயணிக்க வேண்டும்,’’ என்றார்.
இந்திய விண்வெளித் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பல்கலை இணை வேந்தர் கிருஷ்ணகுமார், துணைவேந்தர் நாகராஜா ஆகியோர் விருதை வழங்கினர். எல் அண்டு டி நிறுவனத்தின், இணை பொது மேலாளர் கிஷோரா ஷெட்டி, இந்திய விமானவியல் சங்க சென்னை கிளை துணைத் தலைவர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
தமிழகத்திற்கு நீர் விடுவிப்பது கடினம்; காவிரி விவகாரத்தில் கர்நாடகா பிடிவாதம்
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ்., மங்ரோல்' நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் கடற்படையில் சேர்ப்பு
-
பாஜ ஆட்சிக்கு வந்தபின் முதல் நவராத்திரி : மேற்கு வங்கம் முழுவதும் விழாக்கோலம்
-
கலப்படமான உணவு, தரமற்ற மருந்துகளுக்கு எதிரான போராட்டம் தொடரும்; துக்காராம் உறுதி
-
அரசு முத்திரை, போலி சான்றிதழ்கள் தயாரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பலே’ மோசடி: எர்ணாவூரைச் சேர்ந்த 6 பேர் கும்பல் சிக்கியது
-
'கிரானைட்' வீரமணி வழக்கு: கூடுதல் டிஜிபி அருணிடம் விசாரணை