கானாத்துார் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

கூவத்துார்: கானத்துார் ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கானத்துார் - கொடப்பட்டினம் இடையேயான சாலை 1 கி.மீ., துாரம் கொண்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார் சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர் .

பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்த சாலையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement