வெற்றிக்கரமாக நடந்த இந்தியா-ஆஸ்திரேலிய-'ஏ' அணி தொடர்: புதுச்சேரி அரசுக்கு சி.ஏ.பி., நிறுவனர் தாமோதரன் நன்றி
புதுச்சேரி: இந்தியா-ஆஸ்திரேலிய'ஏ' அணிகளுக்கு இடையே சர்வதேச தொடரை வெற்றிக்கரமாக நடத்த உதவிய புதுச்சேரி அரசு உள்ளிட்ட அனைவருக்கும் சி.ஏ.பி., நிறுவனம் தாமோதரன் நன்றி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துத்திப்பட்டு சி.ஏ.பி., மைதானத்தில் இந்திய'ஏ' - ஆஸ்திரேலிய 'ஏ' அணிகள் 2 நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி துவங்கி 25ம் தேதி வரையிலும், 2வது போட்டி வரும் 29ம் தேதி துவங்கி 2ம் தேதி வரையிலும் நடந்தது. மூன்று ஒருநாள் போட்டிகள் அக்டோபர் 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடந்தது.
புதுச்சேரியில் முதல் முறையாக நடந்த இந்த சர்வதேச தொடர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதனையடுத்து கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி- சி.ஏ.பி., நிறுவனர் தாமோதரன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் இந்திய 'ஏ' மற்றும் ஆஸ்திரேலிய'ஏ' அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு எங்களுக்கு வாய்ப்பளித்த ஐ.சி.சி., தலைவர் ஜெய் ஷா, பி.சி.சி.ஐ., அமைப்பிற்கும் நன்றி.
இந்தத் தொடர் மாபெரும் வெற்றியடைய அரும்பாடுபட்ட மைதானப் பணியாளர்கள், மின்சாரத் துறை, பிளம்பிங், துாய்மைப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் முதல் சி.ஏ.பி., குழுக்கள், உறுப்பினர்கள், நிர்வாகிகள், மாவட்ட சங்கங்கள் மற்றும் அகாதமிகள் வரை அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் அனைவரின் அர்ப்பணிப்பும் உழைப்பும் அளப்பரியது.
அத்துடன், இத்தொடருக்கு மிகச்சிறந்த ஆதரவையும் ஒருங்கிணைப்பையும் வழங்கிய புதுச்சேரி அரசுக்கும், காவல் துறை, தீயணைப்புத் துறை, மின்சாரத் துறை, விளையாட்டுத் துறை மற்றும் சுகாதாரத் துறை ஆகிய அரசுத் துறைகளுக்கும் நன்றி.
இரு அணிகளின் வீரர்கள், ஆதரவுப் பணியாளர்கள் மற்றும் வர்ணனையாளர்களின் பங்களிப்புக்கு எனது பாராட்டுகள். மேலும், ஒவ்வொரு ஒருநாள் போட்டியின் போதும் சராசரியாக 10,000 பார்வையாளர்கள் வருகை தந்து அரங்கை நிரப்பி, போட்டியை உற்சாகப்படுத்திய ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்தத் தொடரை வெற்றியடையச் செய்ய பெரும் ஆதரவு அளித்த ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்களுக்கும் நன்றி. இந்த மகத்தான கூட்டுச் சாதனைக்குக் காரணமான அனைவருக்கும் எனது வாழ்த்துகள். புதுச்சேரி, சீகெம் மைதானத்தில் நடைபெறவுள்ள அடுத்தடுத்த பெரிய போட்டிகளில் மீண்டும் சந்திப்போம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பா? மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்