பில் தொகைக்காக ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலாளர் அதிரடி கைது
ஊட்டி: நீலகிரி மாவட்டம் இத்தலார் ஊராட்சி செயலாளர் கார்த்திக், 28. ஊராட்சிக்கு உட்பட்ட ஒசட்டி பகுதியில் நீர் தேக்கத் தொட்டி 7.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், பணிக்கான பில் தொகையை ஒப்பந்ததாரர் சரவணன் கார்த்திக்கிடம் விடுவிக்க கோரியுள்ளார்.
பில் தொகையை விடுவித்த கார்த்திக், ரூ.20,000 லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன் ஊட்டி ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார் .
லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ஜாய் தயாள், ஆய்வாளர் சண்முகவடிவு தலைமையில் போலீசார் ரசாயன தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். இன்று மாலை அலுவலகத்திற்கு சென்று சரவணன், ஊராட்சி செயலாளர் கார்த்திக்கிடம் பணம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கார்த்திகை கையும் களவுமாக பிடித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
ஹார்முசில் 2 கப்பல்கள் மீது தாக்குதல் 20 இந்திய மாலுமிகள் மீட்பு; 2 பேர் மாயம்
-
வறட்சியின் தாகம்: மேதவாச்சியாவின் கண்ணீர்
-
ஷாசாத் கூட்டாளிகள் பதுங்கல்: ஈரோடு, திருப்பூரில் என்ஐஏ வலை
-
கடலை மிட்டாய் 'கேக்' ஆனது எப்படி? பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் அதிர்ச்சி
-
இண்டி கூட்டணி பேரணியில் பரபரப்பு; நெருக்கிய நபரை முழங்கையால் குத்திய ராகுல்
-
காங்கிரசின் அழுகிய பிணங்களை சுமந்ததே தோல்விக்கு காரணம்: திமுக செம காட்டம்