ஹார்முசில் 2 கப்பல்கள் மீது தாக்குதல் 20 இந்திய மாலுமிகள் மீட்பு; 2 பேர் மாயம்
மஸ்கட் : ஓமன் அருகே ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், 22 இந்திய மாலுமிகளுடன் சென்ற இரண்டு வணிகக் கப்பல்கள் மீது, அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஓமனின் சோஹர் துறைமுகப்பகுதியில், நிகரகுவா நாட்டு கொடியுடன் 'எம்.டி. பெட்ரோ டால்பின்' என்ற எண்ணெய் கப்பல் நின்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென அந்த கப்பல் மீது வான்வழியாக ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்த கப்பலில் 11 இந்திய மாலுமிகள் இருந்த நிலையில், பீர் பகதுார் யாதவ் மற்றும் அமித் சிங் ஆகிய இரண்டு பேர் மாயமாகியுள்ளனர். மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனேவால் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று மார்ஷல் தீவுகள் கொடியுடன் சென்ற 'எம்.டி. வால்தேரா' என்ற எண்ணெய் கப்பல் மீதும் அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்று தாக்கியுள்ளது. இதனால், கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எனினும், கப்பலில் பணியில் இருந்த, 11 இந்திய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நம் வெளியுறவு அமைச்சகம், வணிகக் கப்பல்கள், மாலுமிகள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு, பன்னாட்டு நீர்வழிகளில் தடையற்ற கடல்வழி வர்த்தகமும், கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பும் முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
கடந்த வாரமும் இதேபோன்று ஓமன் கடற்பகுதியில் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், 11 இந்திய மாலுமிகள் காயமடைந்தனர். இந்நிலையில், மீண்டும் தாக்குதல் நடந்திருப்பது சர்வதேச கடற்பாதுகாப்பு குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது.
மேலும்
-
வறட்சியின் தாகம்: மேதவாச்சியாவின் கண்ணீர்
-
பில் தொகைக்காக ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலாளர் அதிரடி கைது
-
ஷாசாத் கூட்டாளிகள் பதுங்கல்: ஈரோடு, திருப்பூரில் என்ஐஏ வலை
-
கடலை மிட்டாய் 'கேக்' ஆனது எப்படி? பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் அதிர்ச்சி
-
இண்டி கூட்டணி பேரணியில் பரபரப்பு; நெருக்கிய நபரை முழங்கையால் குத்திய ராகுல்
-
காங்கிரசின் அழுகிய பிணங்களை சுமந்ததே தோல்விக்கு காரணம்: திமுக செம காட்டம்