ஷாசாத் கூட்டாளிகள் பதுங்கல்: ஈரோடு, திருப்பூரில் என்ஐஏ வலை
சென்னை : பாகிஸ்தான் பயங்கரவாதி ஷாசாத் பட்டி கூட்டாளிகள், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவவலையடுத்து, அந்த மாவட்டங்களில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்( என்ஐஏ) தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாசாத் பட்டி, பயங்கரவாதியாக உருவெடுத்துள்ளான். இவஜ், 'ஷாசாத் பட்டி நெட்ஒர்க்' என்பதன் சுருக்கமாக, எஸ்பிஎன் என்ற அமைப்பையும் ஏற்படுத்தி உள்ளான்.
இவனது தலைமையில் செயல்படும் கும்பல், நம் நாட்டு இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத செயலுக்கு தயார் செய்வதாக கூறப்படுகிறது. என்ஐஏ அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
அவர்கள் விசாரணை நடத்தி, கடந்த, செப்டம்பர் 16ம் தேதி, தஞ்சாவூரில் பதுங்கி இருந்த எஸ்பிஎன் அமைப்பைச் சேர்ந்த, உபி மாநிலத்தைச் சேர்ந்த மக்சூத் அலி, 21 என்பவனை, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தஞ்சாவூரில் யாசர் அப்துல், 45, உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பதுங்கியுள்ள கூட்டாளிகளை தேடும் பணியில், என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில், எஸ்பிஎன் அமைப்பை சேர்ந்தவர்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பாதுகாப்பு துறை அலுவலங்களை குறி வைத்து, சதிச் செயல்களை நடத்த திட்டமிடட்டு வருகின்றனர். முக்கியமாக, காஸ் சிலிண்டர்களை, காரில் ஏற்றிச் சென்று காவல் நிலையங்கள் மீது மோதி தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே சிக்கிய நபர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், அவர்களின் கூட்டாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பா? மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்