பெற்றோருடன் தகராறு: சிறுமியை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற கொடூர காவலாளி

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் கோவ்கூர் பகுதியில் வசித்து வசிப்பவர்கள் மில்டன் பெர்ணாண்டஸ் - டெய்சி இவாங்கிலியா தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஐந்து வயதில் மகள் உள்ளனர்.

இவர்கள் வசித்த குடியிருப்பில் பீஹாரை சேர்ந்த விக்ரம் என்பவர் காவலாளியாக வேலைபார்த்துள்ளார். இவர், இந்த தம்பதியிடமும், அங்கு குடியிருப்பவர்களிடமும் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து விக்ரம் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இ்ந்த ஆத்திரத்தில் மில்டன் பெர்ணாண்டஸின் ஐந்து வயது மகளை, விக்ரம் கடத்தி சென்றார். ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார்.

பிறகு சிறுமியின் கைகளை கட்டி, பெரிய கல் ஒன்றுடன் சிறுமியை கட்டி தண்ணீரில் தூக்கி போட்டு கொலை செய்தார்.

சிறுமியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸ் கமிஷனர் பேச்சு நடத்தி, குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து போராட்டத்தை வாபஸ் பெறச் செய்தார்.

Advertisement