'கிரானைட்' வீரமணி வழக்கு: கூடுதல் டிஜிபி அருணிடம் விசாரணை
சென்னை : 'கிரானைட்' வீரமணி, 85, வழக்கை கையாண்ட விதம் குறித்து, சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த அருணிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில், சென்னை போலீஸ் கமிஷனராக கூடுதல் டி.ஜி.பி., அருண் பணிபுரிந்தார். அப்போது, 'கிரானைட்' வீரமணி, சிறுமியரை பாலியல் வன்முறை செய்தது தொடர்பான புகார் குறித்து, 'போக்சோ' வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை அதிகாரியாக, சென்னை போலீசின் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனராக இருந்த யாஸ்மின் பணியாற்றினார்.
இவர், 'கடந்த பிப்., 19ம் தேதி, குற்றம் நடந்ததாக கூறப்படும் வீட்டில், எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. வீடியோவில் இருக்கும் நபர் வீரமணி தான் என்பதை உறுதி செய்ய முடியவில்லை' என, பல்வேறு காரணங்களை கூறி, வழக்கு விசாரணையை முடித்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கிரானைட் வீரமணி மீதான குற்றச்சாட்டுகள் தீவிர விசாரணை செய்யப்படுகிறது. எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்கள் வீரமணி உட்பட, ஏழு பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடைய, வீரமணி மீதான குற்றத்தை மூடிமறைக்க, போலீஸ் அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுகுறித்தும் விசாரித்து வருவதாக, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், போக்சோ நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தனர். மேலும், வீரமணி விவகாரத்தில், சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்தது குறித்து, மற்றொரு குழு போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், வீரமணி மீதான 'போக்சோ' வழக்கு விசாரணையை கையாண்ட விதம் குறித்து, சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த அருணுக்கு, 'சம்மன்' அனுப்பி விசாரணை நடந்துள்ளது. அவரிடம், 80 கேள்விகள் கேட்டு வாக்குமூலம் பெறப்பட்டு இருப்பதாக, காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, அருண் எந்த பணியிடமும் தரப்படாமல், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
அரசியல் பின்பலம் இருப்பதால் CBI வசம் ஒப்படைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளவேண்டும்
Sack, Arrest& Punish All Power-Misusing-MegaLoot Rulers& OverFattened StoogeWasteOfficials especially Police, Bureaucrats& Judgesமேலும்
-
தமிழகத்திற்கு நீர் விடுவிப்பது கடினம்; காவிரி விவகாரத்தில் கர்நாடகா பிடிவாதம்
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ்., மங்ரோல்' நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் கடற்படையில் சேர்ப்பு
-
பாஜ ஆட்சிக்கு வந்தபின் முதல் நவராத்திரி : மேற்கு வங்கம் முழுவதும் விழாக்கோலம்
-
கலப்படமான உணவு, தரமற்ற மருந்துகளுக்கு எதிரான போராட்டம் தொடரும்; துக்காராம் உறுதி
-
அரசு முத்திரை, போலி சான்றிதழ்கள் தயாரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பலே’ மோசடி: எர்ணாவூரைச் சேர்ந்த 6 பேர் கும்பல் சிக்கியது
-
‘மனதுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து சாதிக்கணும்’