நிபந்தனை ஜாமின் கையெழுத்தில் மோசடி : டி.ஜி.பி.,யிடம் புகார்
புதுச்சேரி: நிபந்தனை ஜாமினில் கையெழுத்திடுவதில் மோசடி நடந்ததாக டி.ஜி.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டது.
போலி பத்திரம் பதிவு செய்வது சம்பந்தமாக சார்பதிவாளரை தாக்க முயன்றது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து, புதுச்சேரியை சேர்ந்த சுந்தர் மீது ஜாமினில் வெளிவரமுடியாத வழக்கு பதியப்பட்டது. இதன்படி, காரைக்கால் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், 51 நாள் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமின் விதிக்கப்பட்டது. ஆனால், இதில் மோசடியில் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது சம்பந்தமாக முருங்கப்பாக்கத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் உதயநாராயணன் டி.ஜி.பி.,யிடம் கொடுத்துள்ள புகாரில், தலைமை நீதிபதி உத்தரவின்படி காரைக்கால் டவுன் ஸ்டேஷனில், கையெழுத்து போடுவதில், சுந்தர் மோசடி செய்துள்ளார். அவர் ஒரே நேரத்தில், இரண்டு இடங்களில் கையெழுத்துப் போட்டுள்ளார். இது தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கின் விசாரணை அதிகாரியான உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் மற்றும் காரைக்கால் டவுன் இன்ஸ்பெக்டரிமும் மக்கள் மன்றத்தின்போது, புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.