மாஜி முதல்வர் பினராயி, அவரது மகள், மருமகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
திருவனந்தபுரம்: கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, 'சி.எம்.ஆர்.எல்., - எக்ஸாலாஜிக்' நிறுவனம் தொடர்புடைய லஞ்ச வழக்கில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த அம்மாநில முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், 81, அவரது மகள் வீணா உள்ளிட்டோர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
கேரளாவில், காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் சதீசன் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2016 -- 26 வரை மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பினராயி விஜயன் முதல்வராக பதவி வகித்தார். அப்போது, 2017ல், அவரது மகள் வீணாவுக்கு சொந்தமான, தற்போது செயல்பாட்டில் இல்லாத, 'எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்' என்ற ஐ.டி., நிறுவனத்துக்கு, எந்தவொரு தகவல் தொழில்நுட்ப சேவையும் பெறாமல், 2.78 கோடி ரூபாயை, சி.எம்.ஆர்.எல்., எனப்படும், 'கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூட்டைல் லிமிடெட்' நிறுவனம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில், பினராயி விஜயன், அவரது மகள் வீணா, அவரது கணவரும், முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதிய கோரி, கடந்த மாதம் கேரள போலீசுக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியது. எனினும், காங்., அரசு தீவிரம் காட்டவில்லை.
இது தொடர்பான வழக்கை சமீபத்தில் விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை அறிக்கையின் அடிப்படையில், பினராயி விஜயன், வீணா உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய உத்தரவிட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, 'சி.எம்.ஆர்.எல்., - எக்ஸாலாஜிக்' தொடர்புடைய லஞ்ச வழக்கில், பினராயி விஜயன், வீணா, முகமது ரியாஸ் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில், முதல் குற்றவாளியாக பினராயி விஜயனும், இரண்டாவது குற்றவாளியாக வீணாவும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இது தவிர, சி.எம்.ஆர்.எல்., நிறுவனத்திடம் இருந்து பெற்ற பணத்தை ஹவாலா வழிகள் மூலம் வெளிநாட்டுக்கு பணம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்தும், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், வீணாவின் கணவரும், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,வுமான முகமது ரியாஸ் முதல் குற்றவாளியாகவும், வீணா இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதற்கு மார்க்சிஸ்ட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, பினராயி விஜயன், வீணா உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலிபாபா 40 திருடர்கள். குடும்பமே கொள்ளை கூட்டம்
கேரளா கம்யூனிஸ்ட் காரனும் மதராஸ் மாநில கருணாநிதி போல பக்கா திருடனாக இருந்திருக்கான் .
மூன்று பேர் உள்ளே இருக்க வேண்டும். இவர், கால் கட்டு நாடக ராணி மற்றும் கெஜ்ரி. இவர்கள் எந்த அடிப்படை பண்பும் இல்லாத அரசியல்வாதிகள். ராகுல் மட்டும் வெளியே இருக்கட்டும் இன்னும் அழுத்தமாக பாஜகவின் வெற்றிக்கு உழைக்க.
மாஜி முதல்வர் பினராயி, மகள், மருமகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு. நல்ல செய்தி.கம்யூனிஸ்ட் தலைவர்களின் உண்மை சொரூபமே இது தான் .நைஷ்டிக பிரம்மச்சாரியாய் அருள் பாலிக்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரங்களில் பெண்களுக்கு அனுமதி மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறை மற்றும் துவாரபாலகர் சிலைகளில் இருந்து சுமார் 4.5 கிலோ தங்க எடைக் குறைவு மற்றும் தங்கக் கிரீடம் திருடப்பட்டது என ஹிந்து விரோத செயல்களில் ஈடுபட்ட சிவப்பு தாலிபான்கள் கூட்டங்கள் தண்டனை அனுபவிக்கும் நேரம் .சிவப்பு சாயம் வெளுத்து போச்சு டும்டும்டும்
வெறும் 2.78 கோடிக்கு வழக்கா.? நம்ம ஊரில் உள்ளாட்சி மாமன்ற உறுப்பினரே இதை மிகவும் சாதாரண தொகையாக நினைப்பார்.
குடியரசு ஆகி 75 ஆண்டுகள் கடந்தும் லஞ்ச, ஊழல் வழக்குப்பதிவு செய்ய ஆட்சி மாறவேண்டும் ?? பேரவலம் ..... சுதந்திர தினம், குடியரசு தினம் எதையும் கொண்டாட நமக்கு அருகதை உள்ளதா ??
இந்த லட்சணத்தில் CEC மீது போராட்டம்.
கொஞ்ச நாள் உள்ளே போட்டு வையுங்கள் நாடு கொஞ்சம் அமைதியாக இருக்கட்டும் இல்லையெனில் கரப்பான் பூச்சிக்கு எல்லாம் ஆள் அனுப்புவார்கள்மேலும்
-
பயங்கரவாதியே, ஏன் இங்கு வந்தாய்; நியூயார்க்கில் முகமது யூனுஸ்க்கு கடும் எதிர்ப்பு
-
மின்னணு பண பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம்
-
விவசாயிகளின் விவரங்களை துல்லியமாக பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை
-
தாசில்தார், சார் பதிவாளருக்கு ‘பிடிவாரண்ட்’ திட்டக்குடி சப் கோர்ட் நீதிபதி அதிரடி
-
கொலை வழக்கில்மேலும் ஒருவர் கைது
-
சில்லறை விற்பனை டீசல் பங்க் கோரி பழையாரில் 2 வது நாளாக போராட்டம்