அமெரிக்காவில் தேர்தல்: டிரம்ப் கட்சிக்கு ரூ.2,641 கோடி வாரி இறைத்த எலான் மஸ்க்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில், குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக, உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், 276 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2641.5 கோடி) பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
பிரம்மாண்ட நன்கொடை
அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி, இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது, இதில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையைத் தக்கவைக்க கடும் போட்டி நிலவுகிறது. இதில், டிரம்ப் கட்சியை எப்படியாவது கரைசேர்த்துவிட வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், ஜூலை மாதத்தில் இருந்து மட்டும் 276 மில்லியன் டாலருக்கும் மேல் (சுமார் ரூ.2641.5 கோடி) வாரி வழங்கியுள்ளார். நடப்பு தேர்தல் களத்தில் தனிநபர் ஒருவரால் வழங்கப்பட்ட மிக பிரம்மாண்டமான நன்கொடை இதுவாகும்.
கோடிக்கணக்கான டாலர் செலவு
மஸ்க் வழங்கிய நிதியில் பெரும் பகுதியான 158 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,512 கோடி), செனட் தேர்தல் நிதியான 'செனட் லீடர்ஷிப் பண்ட்' அமைப்புக்கு நேரடியாகச் சென்றுள்ளது. இதுதவிர, தனது சொந்த அரசியல் நடவடிக்கைக் குழுவான 'அமெரிக்கா பிஏசி' மூலமாகவும், பிற குடியரசுக் கட்சி வேட்பாளர்களின் பிரசாரக் குழுக்களுக்கும் கோடிக்கணக்கான டாலர்களை செலவு செய்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு:
ஏற்கனவே அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு தீவிர ஆதரவு தெரிவித்து வந்த மஸ்க், தற்போது இடைக்காலத் தேர்தலிலும் தனது பணபலத்தைக் கொண்டு குடியரசுக் கட்சிக்கு முட்டுக்கொடுப்பது ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறது என ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அமெரிக்க அரசியலில் பெரும் பணக்காரர்களின் ஆதிக்கம் தலைதூக்குவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
சர்வர் விலைகள் நான்கு மடங்கு அதிகரிப்பு; ஐடி துறையில் நிச்சயமற்ற வணிக சூழல்: ஸ்ரீதர் வேம்பு தகவல்
-
நர்ஸ் அடித்து கொன்று புதைப்பு கள்ளக்காதலனுக்கு 'காப்பு'
-
சாலையில் குட்டையாக தேங்கிய கழிவுநீர் கண்டுகொள்ளாத ஓசூர் ஒன்றிய அதிகாரிகள்
-
இரு தரப்பினர் மோதல் 5 பேர் மீது வழக்கு
-
சென்னை போராட்டத்திற்கு செல்ல முயன்ற 19 மருத்துவ பணியாளர்கள் கி.கிரியில் கைது
-
15ல் தி.மு.க., மறுசீரமைப்பு கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை