சென்னை போராட்டத்திற்கு செல்ல முயன்ற 19 மருத்துவ பணியாளர்கள் கி.கிரியில் கைது
கிருஷ்ணகிரி: சென்னையில் பணிநிரந்தரம் கோரி, தினக்கூலி மருத்துவ பணியாளர்கள் நடத்தும் போராட்-டத்தில் பங்கேற்க, கிருஷ்ணகிரியில் இருந்து செல்ல முயன்ற பல்நோக்கு மருத்துவ பணியா-ளர்கள், 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே மருத்துவப்பணியாளர்கள் நடத்தும் உண்ணாவி-ரத போராட்டத்தில் பங்கேற்க கிருஷ்ணகிரியில் இருந்து பல்நோக்கு மருத்துவமனை பணியா-ளர்கள், 10 பெண்கள் உட்பட, 19 பேர் செல்ல திட்-டமிட்டனர்.
இதற்காக, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த மருத்துவ பணியாளர்-களை, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்-றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணி முதல் நேற்று காலை, 7:00 மணி வரை தங்க வைக்கப்பட்டு விடுவித்தனர். இதுகுறித்து செவிலியர்கள் கூறுகையில், 'பணி நிரந்தரம், மாதம் ஒரு நாள் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரிலுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க சென்ற எங்களை, போலீசார் கைது செய்தனர். தமிழக அரசு எங்-களை பணி
நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும்' என்றனர்.
மேலும்
-
சவுதி மீது தொடர் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
சர்வர் விலைகள் நான்கு மடங்கு அதிகரிப்பு; ஐடி துறையில் நிச்சயமற்ற வணிக சூழல்: ஸ்ரீதர் வேம்பு தகவல்
-
அமெரிக்காவில் தேர்தல்: டிரம்ப் கட்சிக்கு ரூ.2,641 கோடி வாரி இறைத்த எலான் மஸ்க்!
-
நர்ஸ் அடித்து கொன்று புதைப்பு கள்ளக்காதலனுக்கு 'காப்பு'
-
சாலையில் குட்டையாக தேங்கிய கழிவுநீர் கண்டுகொள்ளாத ஓசூர் ஒன்றிய அதிகாரிகள்
-
இரு தரப்பினர் மோதல் 5 பேர் மீது வழக்கு