நர்ஸ் அடித்து கொன்று புதைப்பு கள்ளக்காதலனுக்கு 'காப்பு'
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அருகே, குடும்ப தகராறில், நர்சை அடித்து கொன்று புதைத்த, அவரின் கள்ளக்காத-லனை போலீசார் கைது செய்தனர்.
க்ஷதர்மபுரி மாவட்டம் கடத்துார் அடுத்த மணியம்-பாடியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 41. இவர் கோவையில் ஹோம் நர்சாக பணியாற்றி வந்தார். அப்போது அங்கு, கள்ளக்குறிச்சி மாவட்டம், தண்-டலை தாலுகா, பெருவாங்கூரை சேர்ந்த நட-ராஜன் மனைவி பாப்பாத்தி, 46, என்பவரும் ஹோம் நர்சாக பணிபுரிந்து வந்தார். இருவ-ருக்கும் பழக்கம் ஏற்பட்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். கடந்த, 6 மாதமாக கடத்துார் வெங்கடசாமி தெருவில், ராஜா என்பவரின் வீட்டில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த, 2ம் தேதி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது.இதில் வெங்கடாசலம் தாக்கியதில், நான்கு நாட்களாக உடல்நிலை மிகவும் பாதித்த நிலையில் பாப்பாத்தி இருந்தார். வெங்கடாசலம் கடந்த, 6ல் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, பாப்-பாத்தி இறந்து கிடந்தார். பயந்து போன அவர், பாப்-பாத்தியின் உடலை துணியில் கட்டி, அருகிலுள்ள கேசவனுடைய காலி நிலத்தில், ஒரு அடி ஆழம் குழி தோண்டி அதில் புதைத்தார். அதன் மீது குப்-பையை போட்டு மூடி விட்டு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் துர்-நாற்றம் வீசியது. மேலும் மண்ணிலிருந்து, மனித கை ஒன்று வெளியே தெரிந்தது. இதைப்பார்த்த அப்பகுதியினர் அளித்த தகவலின்
படி, பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் லட்சுமி, அரூர் (பொ) டி.எஸ்.பி., சீனிவாசன் மற்றும் கடத்துார் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் மற்றும் போலீசார் வந்தனர். துர்நாற்றம் வந்த பகுதியை தோண்டிய-போது, அது பாப்பாத்தியின் உடல் என தெரியவந்-தது.
இதையடுத்து போலீசார், கள்ளக்காதலன் வெங்-கடாசலத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், 'தகராறில், பாப்பாத்தியை அடித்-தபோது, அதிகளவில் ரத்தம் வெளியேறி உடல்-நலம் பாதிக்கப்பட்டார். பின், 4 நாட்களுக்கு பின் இறந்து விட்டார். பயத்தில் அவரை, காலியி-டத்தில் குழி தோண்டி புதைத்து விட்டேன்' என வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த கடத்துார் போலீசார், விசா-ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்காதலன் வெங்கடாசலத்திற்கு, ஏற்க-னவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என்-பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
சர்வர் விலைகள் நான்கு மடங்கு அதிகரிப்பு; ஐடி துறையில் நிச்சயமற்ற வணிக சூழல்: ஸ்ரீதர் வேம்பு தகவல்
-
அமெரிக்காவில் தேர்தல்: டிரம்ப் கட்சிக்கு ரூ.2,641 கோடி வாரி இறைத்த எலான் மஸ்க்!
-
சாலையில் குட்டையாக தேங்கிய கழிவுநீர் கண்டுகொள்ளாத ஓசூர் ஒன்றிய அதிகாரிகள்
-
இரு தரப்பினர் மோதல் 5 பேர் மீது வழக்கு
-
சென்னை போராட்டத்திற்கு செல்ல முயன்ற 19 மருத்துவ பணியாளர்கள் கி.கிரியில் கைது
-
15ல் தி.மு.க., மறுசீரமைப்பு கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை