சர்வர் விலைகள் நான்கு மடங்கு அதிகரிப்பு; ஐடி துறையில் நிச்சயமற்ற வணிக சூழல்: ஸ்ரீதர் வேம்பு தகவல்
சென்னை: சர்வர் விலைகள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது; ஐடி துறையில் நிச்சயமற்ற வணிக சூழல் என ஸோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தகவல் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவு: ஐடி துறை சார்ந்த வணிகச் சூழல் நிச்சயமற்ற நிலையில் உள்ளது. அதேவேளையில், ஏஐ பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருவதாலும், தரவு மையங்களுக்குத் தேவையான சர்வர் விலைகள் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாலும் செலவுகள் பெருமளவு அதிகரித்துள்ளன; இந்தச் செலவுகளைக் கட்டுப்படுத்த நாங்கள் முயற்சித்து வருகிறோம்.
இதற்கிடையில், சவாலான புவிசார் அரசியல் சூழலும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. நாங்கள் எங்கள் சந்தைப்படுத்தல் செலவுகளைக் குறைத்துள்ளோம். இந்த ஆண்டு வழக்கமான ஊதிய உயர்வு இருக்காது என்பதையும் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளோம். இந்த நிலையைத் தவிர்க்க இயலாததற்கு நான் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.
பெருமளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்க நாங்கள் கடுமையாக முயற்சிப்போம்; இருப்பினும், ஒட்டுமொத்தமாக ஐடி துறை வேலைவாய்ப்புகளுக்கான சூழல் கவலைக்குரியதாகவே உள்ளது. கடந்த 18 மாதங்களாகவே நாங்கள் புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதை நிறுத்தி வைத்துள்ளோம்.
எங்கள் ஊழியர்களில் பெரும்பாலோர் இந்தச் சூழலைப் புரிந்துகொண்டுள்ளனர்; அவர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாங்கள் எங்களை முழுமையாகப் புதுப்பித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
அடுத்த 3 முதல் 5 ஆண்டுகள், எங்கள் இந்த மாற்றமும் புதுப்பித்தலும் எந்தளவுக்குப் பலனளித்துள்ளது என்பதைத் தீர்மானிக்கும். தயவுசெய்து எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (2)
GMM - KA,இந்தியா
13 அக்,2026 - 15:02 Report Abuse
அதி முக்கியமற்ற தகவலை பழைய மொபைல், கம்ப்யூட்டர், சர்வர் போன்றவற்றை சர்வீஸ் செய்து பயன்படுத்தும் போது முதலீடு குறையும். நன்கு வேலை தெரிந்த சர்வீஸ் இன்ஜினியரை அரசு உருவாக்கவில்லை. முன்பு BSNL e-mail சேவை மற்றும் சில கட்டண அடிப்படையில் இருந்தது. காரணம் அந்நியரா உள்நாட்டு 2ஜீ துரோகிகளா? 0
0
Reply
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
13 அக்,2026 - 10:49 Report Abuse
ஶ்ரீதர் வேம்பு அவர்கள் நிதர்சனமான உண்மையை சொல்லி இருக்கிறார். உலகளாவிய அரசியல் பொருளாதார சூழல் காரணமாக உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன. வீடாக இருந்தாலும் கம்பெனி ஆக இருந்தாலும் சிக்கன நடவடிக்கை மிக அவசியம். டிரம்ப்பின் அடாவடிகள் குறைந்தால் மாற்றம் ஏற்படும். எனவே லோக ஷேமத்திற்காக நாம் பிரார்த்திப்போம். 0
0
Reply
மேலும்
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு
-
அமைச்சர் நிர்மல் குமாருக்கு ரூ.1 கேட்டு நோட்டீஸ் அனுப்பியது அதிமுக
-
ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் இரட்டை நிலைபாட்டை தவிர்க்க வேண்டும்; இந்தியா வலியுறுத்தல்
-
போதைப்பொருள் விற்பனை குறித்து புகார்; நேரலையின் போது சமூக ஆர்வலர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
5 நாள் பயணமாக இந்தியா வருகிறார் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ
Advertisement
Advertisement