20 நாட்களுக்கு பிறகு குடிநீர் வினியோகத்தால் மக்கள் மகிழ்ச்சி

அரவக்குறிச்சி; சின்னதாராபுரம் அருகே காட்டாம்புதுார் பகு-தியில், 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினி-யோகம் செய்யப்படவில்லை என, நமது நாளி-தழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இந்நிலையில், உள்ளாட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்தது.

அரவக்குறிச்சி அடுத்த சின்னதாராபுரம் பகுதியில் உள்ள, காட்டாம்புதுார் பகுதியில், 20 நாட்க-ளுக்கும் மேலாக முறையாக குடிநீர் வினி-யோகம் செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் நமது நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, நேற்று குடிநீர் வினியோகம் செய்-யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement