போதைப்பொருள் விற்பனை குறித்து புகார்; நேரலையின் போது சமூக ஆர்வலர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
சண்டிகர்: பஞ்சாப்பைச் சேர்ந்த் போதைப்பொருள் எதிர்ப்பு ஆர்வலர் பர்விந்தர் சிங் ஜோட்டா, மானசா பகுதியில் உள்ள மருந்துக்கடையில் ஹெராயின் போதைப்பொருள் விற்பது குறித்த தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, கடைக்காரருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவங்களை அவர், சமூக வலைதளங்களில் நேரலையில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்.
இதனால், கோபமடைந்த கடைக்காரர் திடீரென ஜோட்டாவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். நேற்று நடந்த இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தலைமறைவான துப்பாக்கிச்சூடு நடத்திய மருந்துக்கடை உரிமையாளர் அஸ்வனி குமார், ராஜஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டார். சமூக ஆர்வலர் சுட்டுக்கொல்வதற்கு முந்தை தினம் தான், மானசாவில் போதைப்பொருள் விநியோகம் குறித்து சிபிஐ விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தன் மகனின் உயிருக்கு ஏற்கனவே ஆபத்து இருப்பதை உணர்ந்து, அவன் தன்னிடம் கூறியதாக ஜோட்டாவின் தாயார் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தன்னுடைய மகனை இந்த அரசு பிரித்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும்
-
ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் இரட்டை நிலைபாட்டை தவிர்க்க வேண்டும்; இந்தியா வலியுறுத்தல்
-
5 நாள் பயணமாக இந்தியா வருகிறார் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ
-
சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனம் அராம்கோ தலைமையகம் மீது தாக்குதல்; தொடரும் பதற்றம்
-
தடை செய்யப்பட்ட ஜந்தர் மந்தரில் நுழைந்து போராட்டம்; கரப்பான்பூச்சி அமைப்பினர் கைது
-
த.வெ.க., அரசின் ஒத்துழைப்பு குறைவால் பணிகள் மந்தம்; ஈரோடு எம்.பி., பேட்டி
-
திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த பிக்-அப் வேன்