வாய்க்காலில் புதிய பாலம் கட்ட வலியுறுத்தல்

குளித்தலை: குளித்தலை நகராட்சி வார்டு எண், 6 மற்றும் 7ஐ இணைக்கும் தென்கரை பாசன வாய்க்காலில் பாலம் உள்ளது. இது மிகவும் பலவீனமாக காணப்படுகிறது. இப்பாலத்தின் வழியாக, கடம்பன் துறை காவிரி ஆறு மற்றும் கருர் திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மக்கள் சென்று வருகின்றனர்.

இந்த பாலத்தில் 3 கண்மாயிகள் உள்ளன. இதில் ஒரு கண்மாயில் பாலம் முழுவதும் சேதம் ஏற்-பட்டது. அப்பகுதி மக்கள் பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு, புதிய பாலம் கட்ட கோரிக்கை விடுத்தனர்.நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக ஒரு கண்-மாயில் மட்டும் இரும்பு பாலம் அமைத்து கொடுத்தனர். பாலத்தில் மற்ற பகுதியில் கான்கிரீட் வலு தாங்காமல் உடைந்து வருகி-றது. எனவே பழுதான பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் நகராட்சி நிர்-வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement