நிலத்தகராறில் மூதாட்டியை தாக்கிய இருவர் மீது வழக்கு

பர்கூர்:பர்கூர் அடுத்த பொன்னத்துாரை சேர்ந்தவர் முனியம்மா, 71. இவரது மகன் ஜெயகிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

முனியம்மாவிற்கும் அவரது மருமகள் செல்வி, 45 என்பவருக்கும் நிலம் பிரிப்பதில் தகராறு இருந்துள்ளது. பிரச்னைக்குரிய அந்த நிலத்தில் செல்வி, நிலத்தை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த முனியம்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதில் ஏற்பட்ட தகராறில் முனியம்மாவை, செல்வியும் அவரது மகன் சந்தோஷ், 25, என்பவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த நிலையில் முனியம்மா சிகிச்சை பெற்றார். அவரது மகள் லட்சுமி புகார் படி, பர்கூர் போலீசார் செல்வி, சந்தோஷ், மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement