பணம் திருட முயன்ற இருவருக்கு 'காப்பு'
ஓசூர்:ஓசூர்
அடுத்த மோரனப்பள்ளியை சேர்ந்தவர் மூர்த்தி, 32, அதே பகுதியில் டீ கடை
வைத்துள்ளார். கடந்த, 10ல், வீட்டை பூட்டி விட்டு டீக்கடைக்கு
சென்றுள்ளார். பணி முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின்
முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டிற்குள் சென்றபோது,
இருவர் பீரோவில் இருந்த, 10,000 ரூபாயை திருடிக்கொண்டு தப்ப முயன்றனர்.
அவர்கள் இருவரையும், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து, ஓசூர்
ஹட்கோ போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள், ஓசூர், வெங்கடேஷ்
நகரை சேர்ந்த மணி, 34, தொட்டகிரி ரோடு சதீஷ்குமார், 31, என்பது
தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement