மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:மார்க்சிஸ்ட்
கம்யூ., கட்சி சார்பில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனே பதவி
நீக்கக்கோரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், நேற்று
ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நஞ்சுண்டன்,
பிரகாஷ், மகாலிங்கம், ஆஞ்சலாமேரி, லெனின் முருகன், நாகாராஜ ரெட்டி,
ஸ்ரீதர் உள்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்து பேசியதாவது:
இந்திய
தேர்தல் ஆணையத்திற்குள் நடந்துள்ள மிகப்பெரிய சதி மற்றும் அதிகார
துஷ்பிரயோகம் தற்போது அம்பலமாகியுள்ளது. பா.ஜ., அரசின்
கைப்பாவையாக மாறி, தேர்தல் நடைமுறைகளை தலைமை தேர்தல் ஆணையர்
ஞானேஷ்குமார் சீர்குலைத்துள்ளார். இரண்டு தேர்தல் ஆணையர்களின் கடும்
எதிர்ப்பையும் மீறி, 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின்
பெயர்களை நீக்கியுள்ளார். தேர்தல் ஆணையர்களை நியமிக்கும்
குழுவிலிருந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி, 2023ல்
கொண்டு வந்த ஜனநாயக விரோத சட்டம் ரத்து செய்ய வேண்டும். பழைய முறையே
மீண்டும் நடைமுறைக்கு வர வேண்டும். தேர்தல் ஆணையம் எடுத்துள்ள
முடிவுகளை, உச்சநீதிமன்றம் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.
மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை பறிக்கும், இந்த
சர்வாதிகார போக்கை கண்டிக்கின்றோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும்
-
'ஆன்லைன்' விளையாட்டு: விழிப்புணர்வு முகாம்
-
குன்னுார் சிம்ஸ் பூங்கா :வசீகரிக்கும் வண்ண மலர்கள்
-
மழை தொடர்வதால் நெல் விவசாயிகள் மகிழ்ச்சி
-
திறக்கப்படாத பம்ப் அறை அதிருப்தியில் உள்ளூர் மக்கள்
-
பூட்டி கிடக்கும் அலுவலகம் அதிருப்தியில் உள்ளூர் மக்கள்
-
கண்காட்சி கார்னர். இந்தியன் பிளம்பிங் கான்பரன்ஸ் & எக்ஸ்போ – 2026