த.வெ.க., - தி.மு.க., மோதலில் 6 பேர் மீது வழக்கு பதிவு

நாமகிரிப்பேட்டை; நாமகிரிப்பேட்டை அடுத்த சின்னகாக்காவேரி பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இங்குள்ள ஏரியில், மண் அள்ளு-வது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., - த.வெ.க., நிர்வாகிகள் இடையே சில நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்-தினம் வடுகம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், இரு தரப்பினரும் மோதிக்கொண்-டனர். இதன் தொடர்ச்சியாக சின்னகாக்காவேரி பகுதியிலும் மோதி கொண்டனர்.வெள்ளக்கல்பட்டியிலிருந்து வடுகம் செல்லும் ஏரிக்கரை சாலையில், த.வெ.க.,வை சேர்ந்த பால் கொள்முதல் நிலையம் நடத்தி வரும் சூர்யபி-ரகாஷ், 29, கூலித் தொழிலாளர்களான சிவா, 25, கவின், 24, ஆகியோர் சென்றனர். அப்போது மது போதையில் நின்று கொண்டிருந்த சின்னகாக்கா-வேரியை சேர்ந்த தி.மு.க.,வினரான பூபாலன், 23, செல்வராஜ், 36, மணிகண்டன், 36, உள்ளிட்டோர், த.வெ.க.,வினரை வழி மறித்து, 'நாங்கள் ஏரியில் மண் அள்ள சென்றால் போலீசுக்கு தகவல் தெரி-விக்கிறீர்களா' எனக் கூறி ஆபாசமாக திட்டி வம்-புக்கு இழுத்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இந்த மோதலில் காயமடைந்த த.வெ.க.,வை சேர்ந்த சூர்யபிரகாஷ், கவின் ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவமனையிலும், சிவா ராசிபுரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வரு-கின்றனர். அதேபோல் தி.மு.க., தரப்பில் காயம-டைந்த பூபாலன், செல்வராஜ், மணிகண்டன் ஆகியோர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நாமகிரிப்பேட்டை போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த, 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement