நெடுஞ்சாலையில் பைக்கில் 'வீலிங்' அச்சத்துடன் வாகன ஓட்டிகள்
ஓசூர்; கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் வழியாக பெங்க-ளூருக்கும், அங்கிருந்து கிருஷ்ணகிரிக்கும், தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தினமும், 80,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரு-கின்றன. இச்சாலையில், ஓசூர், சூளகிரி பகு-தியில் வாலிபர்கள் அடிக்கடி பைக்கில், 'வீலிங்' சாகசம் செய்கின்றனர். அதனால், அவ்வழியாக செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்-படுகிறது.
திடீரென சாலையில் 'வீலிங்' செய்யும் வாலி-பர்கள் மீது மோதாமல் இருக்க, டிரைவர்கள் தங்-களது வாகனங்களை திருப்பும் போது, அது மற்ற வாகனங்கள் மீது மோதி, விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, பேரண்டப்பள்ளி முதல் சூளகிரி வரை, 'வீலிங்' செய்வது அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு கூட, வாலிபர்கள் ஹெல்மெட் அணியாமல், 'வீலிங்' சாகசம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
வாலிபர்களின் இதுபோன்ற ஆபத்தான சாகச பய-ணங்களால், அதே சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளை, விபத்தில் சிக்க வைக்கும் ஆபத்து உள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சா-லையில் ரோந்து செல்லும் போலீசார், 'வீலிங்' செய்யும் வாலிபர்களை பிடித்து கைது செய்வ-துடன், வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
சவுதி மீது தொடர் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
சர்வர் விலைகள் நான்கு மடங்கு அதிகரிப்பு; ஐடி துறையில் நிச்சயமற்ற வணிக சூழல்: ஸ்ரீதர் வேம்பு தகவல்
-
அமெரிக்காவில் தேர்தல்: டிரம்ப் கட்சிக்கு ரூ.2,641 கோடி வாரி இறைத்த எலான் மஸ்க்!
-
நர்ஸ் அடித்து கொன்று புதைப்பு கள்ளக்காதலனுக்கு 'காப்பு'
-
சாலையில் குட்டையாக தேங்கிய கழிவுநீர் கண்டுகொள்ளாத ஓசூர் ஒன்றிய அதிகாரிகள்
-
இரு தரப்பினர் மோதல் 5 பேர் மீது வழக்கு