15ல் தி.மு.க., மறுசீரமைப்பு கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்டத்தில் வரும், 15ல் மறு சீரமைப்பு கூட்டம் நடக்கிறது. இது குறித்து தி.மு.க., கிழக்கு மாவட்ட செய-லாளர் மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் உதயநிதி அறிவுறுத்தல் படி அனைத்து பகுதிகளிலும், தி.மு.க., மறு சீரமைப்பு கூட்டம் நடக்கிறது. அதன்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் வரும், 15ல் கூட்டம் நடக்கிறது. மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை வகிக்கிறார். தி.மு.க., மேலிடப்பார்வையாளர்க-ளான முன்னாள் எம்.பி., கிருஷ்ணசாமி, தி.மு.க., மகளிர் தொண்டரணி மாநில செயலாளர் நாமக்கல் ராணி ஆகியோர் கலந்து கொண்டு, தி.மு.க., மறுசீரமைப்பு குறித்து கட்சித்தலை-மையின் கருத்துக்களை எடுத்துரைக்கின்றனர்.

வரும், 15 காலை, 9:30 மணிக்கு ஊத்தங்கரை, எஸ்.வி.எஸ்., திருமண மண்டபம், 12:00 மணிக்கு பர்கூர் சஞ்சீவி மஹால், மதியம், 3:00 மணிக்கு கிருஷ்ணகிரி தேவராஜ் மஹாலில் கூட்டம் நடக்-கிறது. இதில், அந்தந்த சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்கு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய நகர, பேரூர் நிர்வாகிகள் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement