சாக்கடை பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபர் பலி

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, பெரியமணலி அத்-திக்காடு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம்,50; மகன் சந்தோஷ்குமார், 17; ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்தார். சந்தோஷ்குமார் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்-ததால், அப்பகுதியில் உள்ள அவரது பாட்டி கொண்டி, 70, என்பவரது அரவணைப்பில் வாழ்ந்து வந்தார்.

நேற்று முன்தினம் முதல் இவரை காண-வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க-வில்லை. இந்நிலையில் நேற்று பகல் 3:00 மணிக்கு, அப்பகுதியில் சாலையோரத்தில் உள்ள சாக்கடை பாலத்தின் அடியில், 4 அடி பள்ளத்தில் சந்தோஷ்குமார் உயிரிழந்த நிலையில் கிடந்-துள்ளார். சாக்கடை பால திட்டில் படுத்திருந்த போது தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரது சடலத்தை மீட்டு, எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement