கத்தியை காட்டி நகை வழிப்பறி வாலிபருக்கு 33 மாத சிறை

சேலம்: கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபருக்கு, 33 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வாழப்பாடியை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி ஜோதி, 45. இவர் கடந்த 2023ல், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த வாலிபர், கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமி-ருந்து அரை பவுன் தங்கத்தோடு, அரை பவுன் தாலி ஆகியவற்றை பறித்துச் சென்றார்.இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து, புள்ளம்பட்டி, வலசையூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் திருமலை, 23, என்ப-வரை கைது செய்து சிறையில்
அடைத்தனர்.
இவ்வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், திரும-லைக்கு 33 மாத சிறை தண்டனை வழங்கி, நீதி-பதி ஜெய்குமார் உத்தரவிட்டார்.

Advertisement