பட்டாபிராமில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
ஆவடி: பட்டாபிராமில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு, சாலையோர வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
ஆவடி அடுத்த பட்டாபிராம் வடக்கு மற்றும் தெற்கு பகுதியை இணைக்கும் விதமாக நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே நிர்வாகம் இணைந்து 2010ல் மேம்பாலம் கட்டியது.
மேம்பாலத்தின் கீழ் உள்ள காலி இடத்தை ஆக்கிரமித்து, பூக்கடை, காய்கறி கடைகள், டிபன் கடை, வளையல் கடைகள், என 35க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டன.
இக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், அணுகு சாலையில் தாறுமாறாக பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சென்று வந்தனர். இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் ஏற்பட்டது.
இது குறித்த புகாரையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். அப்போது அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகள், ‘திடீரென கடைகளை அகற்ற சொன்னால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’ என, அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பட்டாபிராம் போலீசார், அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளின் மேற்கூரையை மட்டும் அகற்றி, இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கி சென்றனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இரண்டு நாட்களுக்கு பின், ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்படும். இதையடுத்து, கம்பி வேலி அமைத்து பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்க திட்டம் இல்லை’ என தெரிவித்தனர்.
மேலும்
-
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் நலதிட்ட உதவி வழங்கல்
-
கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
-
‘தினமலர்’ பவளவிழா கட்டுரை போட்டி புதுச்சேரி கல்லுாரி மாணவி முதலிடம்
-
குன்றத்து கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிகள் துவக்கம்
-
கண்காணியுங்க பஸ்களில் பட்டாசு பார்சல்கள் அனுப்புவதை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை அவசியம்
-
ஆர்.எஸ்.மங்கலத்தல் போக்கு காட்டும் பருவ மழையால் விவசாயிகள் ஏமாற்றம்