ஓமலுார் போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

ஓமலுார்; போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரை, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலுார் வேலாக்கவுண்ட-னுாரை சேர்ந்த ஜெயராமன், 46, கூலித்தொழி-லாளி. இவர் தான் குடியிருக்கும் உரிமையாளர் வீட்டில் கடந்த, 8ல் தகராறில் ஈடுபட்டு, பொருட்-களை சேதப்படுத்தியுள்ளார். ஓமலுார் போலீசார் அங்கு சென்ற போது, மது போதையில் இருந்த ஜெயராமன் அடாவடியில் ஈடுபட்டார். அவரை மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.பின்னர் அங்கிருந்து வந்த அவர், மறுவாழ்வு மையத்தில் என்னை சேர்த்து போலீசார் அவமா-னப்படுத்திவிட்டனர் என கூறியபடி, நேற்று காலை ஓமலுார் போலீஸ் ஸ்டேஷன் வளா-கத்தில் நின்று கொண்டு, தன் உடல் மீது பெட்-ரோலை ஊற்றி தீக்குள்ளிக்க முயற்சி செய்தார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்தது மீட்டனர். பின்னர், ஜெயராமனை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Advertisement