சப்த கன்னியர் தேவிகளுக்கு 756 சங்காபிேஷகம்

சேலம்: சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் கும்பாபிேஷகம் முடிந்து 12 ஆண்டுகள் முடிந்த நிலையில், மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த, 4 ஆண்டுகளுக்கு முன் திருப்பணிகள் தொடங்கி, கோவிலில் புதிதாக சப்த கன்னி தேவியர் சிலைகள் பிரதிஷ்டையுடன் கடந்த பிப்.,8ல் விம-ரிசையாக கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது.
தற்போது கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று புதிதாக பிரதிஷ்டை செய்த 'சப்த கன்னியர்'களான பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி ஆகிய ஏழு கன்-னிமார் தேவிகளுக்கும் தலா, 108 சங்-காபிேஷகம் என மொத்தம், 756 சங்காபி ேஷகம் செய்யப்பட்டது.
முன்னதாக காலையில் சப்த கன்னிகளுக்கு, தனித்தனியாக யந்திர கோலம் வரைந்து அதில் புனிதநீர் நிரம்பிய தலா, 108 சங்குகள் அலங்க-ரித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து உலக நன்மை வேண்டியும், மழை பொழிய வேண்டியும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
மதியம் 1:00 மணிக்கு பூர்ணாஹூதியுடன் யாகம் நிறைவடைந்தது. பின்னர் 108 சங்காபி ேஷகம் செய்து சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாரா-தனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

Advertisement