பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது

கெங்கவல்லி: கெங்கவல்லியில், அரசு பஸ் கண்டக்டரை தாக்-கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தம்மம்பட்டியில் இருந்து, கெங்கவல்லி வழியாக ஆத்துார் நோக்கி அரசு பஸ் நேற்று சென்றது. நடு-வலுார் பிரிவு சாலையில் பஸ்சை திருப்ப முடி-யாததால், சாலையோரம் நிறுத்தியிருந்த கெங்க-வல்லியை சேர்ந்த, திருநாவுக்கரசு மகன் கிேஷார்குமார், 30, என்பவர் தனது இருசக்கர வாகனத்தில், பஸ்சில் மோதுவது போல் வந்-துள்ளார்.பஸ் கண்டக்டர் சந்தோஷ்குமார், அந்த நபரிடம் ஓரமாக போகும்படி தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கிேஷார்குமார், கெங்கவல்லி அரசு பள்ளி முன், பஸ்சை வழிமறித்து, கண்டக்-டரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர், கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரி-வித்தார்.
இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து பேச்சு-வார்த்தை நடத்தியபோது, கிேஷார்குமார் மீண்டும் தகராறு செய்துள்ளார். இதையடுத்து, கிேஷார்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement