சவுதி மீது தொடர் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: சவுதி அரேபியா மீதான தாக்குதல்களை அதிகரித்து வரும் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது; ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள்; இது நல்லதல்ல. அமெரிக்க இடைக்கால தேர்தலை எவ்வாறு பாதிக்கிறது என்று எனக்குத் தெரியாது.
நான் அதைக் கருத்தில் கொள்ளவில்லை. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் சமீபத்திய தாக்குதல் பற்றி இப்போதுதான் எங்களுக்குத் தெரியவந்தது நாங்கள் ஒரு முடிவை எடுப்போம்.
ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது என்பது எனக்குத் தெரியும். அவர்களிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்கப் போவதில்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் சவுதி அரேபியாவுடன் இணைவது குறித்து அமெரிக்கா பரிசீலிக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவை இலக்காகக் கொண்ட தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும்
-
பைக்குகள் திருட்டு
-
21 மூட்டை நாட்டு பட்டாசு பறிமுதல் திருநாவலுார் அருகே தம்பதி கைது
-
காங்., கமிட்டி 12 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தலைவர்கள் தேர்வு
-
அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்
-
சாலைப் பாதுகாப்பு, அவசரகால நடவடிக்கை மேம்படுத்த ஒப்பந்தம்
-
விவசாய நிலங்களில் விஷக்கடி தடுப்பு அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு