ஒரே நாளில் 4 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகம் முன் வயதான தம்பதி, மூன்று பெண் குழந்தைகளுடன் வந்த தாய் மற்றும் மாற்றுத்திறனாளி என, 4 பேர் தீக்கு-ளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. காடையாம்பட்டி டேனிஷ்பேட்டையில் வசித்து வரும் அருணா-சலம், 70, அவரது மனைவி மூக்காயி, 65, ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்-கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். போலீசார் தடுத்து தண்ணீர் ஊற்றினர்.

இதுகுறித்து அருணாசலம் கூறுகையில், ''ஏற்-காடு கொண்டையானுாரில் எங்களது பூர்விக நிலம், 12 ஏக்கர் உள்ளது. அதை உறவினர்கள் சிலர், போலியாக பத்திரம் தயாரித்து அபகரித்து கொண்டனர். இது குறித்து கேட்ட போது, கொலை மிரட்டல் விடுக்கின்றனர். ஏற்காடு போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. வயதான காலத்தில் வாழ வழியில்லா-ததால், நிலத்தை மீட்டு தர வேண்டும்,'' என்றார்.* கெங்கவல்லி வடக்கு தெருவை சேர்ந்த சூரியபி-ரியா, 37 என்பவர், தனது மூன்று பெண் குழந்தை-களுடன் கலெக்டர் அலுவலகம் முன் வந்து, பாட்-டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்-ணெயை தன் உடலில் ஊற்றிக்கொண்டு தீக்கு-ளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டனர்.
இதுகுறித்து சூரியபிரியா கூறுகையில்,''எனது கணவர் ஜெகதீஷ், 45, கட்டட மேஸ்திரி. 17 ஆண்-டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கோகிலா, 16, தீபிகா, 14, பவனிகா ஸ்ரீ, 6, என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். கணவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 3 ஆண்டுகளாக பிரிந்-துள்ளோம். மூன்று குழந்தைகளுடன், கணவரின் தந்தை துரைசாமி பெயரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறேன். தற்போது எனக்கு தெரி-யாமல், இந்த வீட்டை கணவர் விற்று விட்டார். வீட்டை வாங்கிய அசோக்குமார் என்பவர், காலி செய்ய சொல்லி மிரட்டுகிறார். இதனால் வேறு வலியின்றி தீக்குளிக்க முயன்றேன்,'' என்றார்.
* கெங்கவல்லி நாகியம்பட்டியை சேர்ந்த மாற்-றுத்திறனாளி தங்கதுரை, 44. நேற்று கலெக்டர் அலுவலக வாசலில் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதுகு-றித்து தங்கதுரை கூறுகையில்.''12 ஆண்டுக்கு முன்பு வங்கி மூலம், 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று மகேந்திரா பிக்கப் வேன் வாங்கி வாட-கைக்கு ஓட்டி வந்தேன். 10 ஆண்டுக்கு முன்பு ஏற்-பட்ட விபத்துக்கு பின் வாகனம்ஓட்ட முடியா-ததால், வேறு ஒருவருக்கு வேனை விற்று விட்டேன். வங்கியில் வாங்கிய கடனை அவர் செலுத்தி விடுவதாகவும், கையில், 45 ஆயிரம் ரூபாய் தந்தார். சொன்னபடி அவர் கடனை செலுத்தாததால், வங்கி அதிகாரிகள் பணம் கேட்டு தொல்லை கொடுக்கின்றனர். தம்மம்பட்டி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் தீக்குளிக்க முயன்றேன்,'' என்றார்.
ஒரே நாளில் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த, 4 பேர் தீக்குளிக்க முயன்றது கலெக்டர் அலுவல-கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement