விவசாய நிலங்களில் விஷக்கடி தடுப்பு அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு

சிதம்பரம்: விவசாய நிலங்களில் ஏற்படும் விஷக்கடிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் விஷக்கடியைத் தடுப்பதற்கான செயல்முறை பயிற்சி மற்றும் முதலுதவி பயிற்சி நிகழ்ச்சி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.

கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ கல்லூரி முதல்வர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ் முன்னிலை வகித்தார். அவசர சிகிச்சை துறை துணைத் தலைவர் திருச்செல்வன் வரவேற்றார். துணை முதல்வர் பாலாஜி சுவாமிநாதன், கல்விப் பிரிவு துணை முதல்வர் சசிகலா, மாவட்ட விவசாய சங்கக் கூட்டமைப்புத் தலைவர் ரவீந்திரன் ஆகியோர் விவசாய நிலங்களில் விஷ பூச்சி கடி பாதிப்பின்போது பின்பற்ற வேண்டிய செய்முறை குறித்து பேசினார்.

தொடர்ந்து காணொளிக் காட்சி மூலம் விவசாய நிலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஏற்படும் விஷக்கடிகள், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள், விஷக்கடி ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், உயிரைக் காக்கும் அடிப்படை முதலுதவி செயல்முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் டாக்டர்கள், அசோக் பாஸ்கர், பாரி உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றுமு் விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டாக்டர் திருஞானம் நன்றி கூறினார்.

Advertisement