சாலைப் பாதுகாப்பு, அவசரகால நடவடிக்கை மேம்படுத்த ஒப்பந்தம்
புதுச்சேரி: சாலைப் பாதுகாப்பு, அவசரகால நடவடிக்கைகளை மேம்படுத்திடும் வகையில், புதுச்சேரி போக்குவரத்து துறைக்கும், அலர்ட் அமைப்பிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுச்சேரி அரசு போக்குவரத்துத் துறைக்கும், அலர்ட் (அமினிட்டி லைப்லைன் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்) என்ற அமைப்புக்கும் இடையே, சாலைப் பாதுகாப்பு மற்றும் அவசர கால நடவடிக்கைகளை மேம்படுத்திடும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் போக்குவரத்துத் துறைச் செயலர் ராஜீவா சுக்லா, அலர்ட் அமைப்பின் தலைவர் மன்னாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர். போக்குவரத்து ஆணையர் அமன்ஷர்மா உடனிருந்தார்.
இதன் மூலமாக, லாரி, பஸ், ஆட்டோ ரிக் ஷா, பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கும், ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாகனப் பதிவுச் சான்றிதழ் புதுப்பித்தல், தகுதிச் சான்றிதழ் பெறுதல் போன்ற பணிகளுக்காகப் போக்குவரத்துத் துறைக்கு வரும் பொது மக்களுக்கும், சாலை பாதுகாப்பு, முதலுதவி மற்றும் அவசர கால நடவடிக்கைகள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக, விபத்துத் தடுப்பு மற்றும் அவசர நிலைத் தயார் நிலை நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், விபத்துகளைத் தடுப்பதில் சமூகப் பங்கேற்பையும் ஊக்குவிக்கும்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நல் உள்ளம் கொண்டவர்களுக்கான, சட்டப் பாதுகாப்புகள் மற்றும் வெகுமதித் திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
சாலைப் பாதுகாப்பு வார நிகழ்ச்சிகள், சாலை விழிப்புணர்வுப் பேரணிகள் மற்றும் கண்காட்சிகளில் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து செயல்படுவதுடன், சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுள்ளது.
மேலும்
-
சிறப்பு 'டெட்' தகுதி தேர்வில் 1.10 லட்சம் ஆசிரியர்கள் 'பெயில்'
-
வரி விவகாரத்தில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்; ஜெய்சங்கர்
-
போப் லியோவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை: நலமுடன் இருப்பதாக வாடிகன் தகவல்
-
ஐரோப்பிய தலைவர்களுக்கு ஆன்லைன் டார்ச்சர்: எலான் மஸ்க் மீது பிரான்ஸ் பகிரங்க குற்றச்சாட்டு
-
சாலையில் ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
-
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி