நவராத்திரி விழா கோலாகலம்; துர்கா பூஜை ஏற்பாட்டாளர்களுக்கு மே.வங்க முதல்வர் சுவேந்து அறிவுறுத்தல்

கோல்கட்டா: துர்கா பூஜை ஏற்பாட்டாளர்கள் மத மரபுகளையும், ஆன்மிகத்தையும் கடைபிடிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் நவராத்திரி திருவிழா, துர்கா பூஜை என்ற பெயரில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் அந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவி வழிபாடே, முதன்மை வழிபாடாக மாறுகிறது.

இங்கு கம்யூனிஸ்ட் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பிரம்மாண்ட விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே துர்கா பூஜையை கொண்டாட அனுமதி வழங்கப்பட்டன.

நவராத்திரி கொண்டாட்டம் பெயரளவுக்கு மட்டுமே இருந்து வந்தது. தற்போது பாஜ மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள நிலையில், துர்கா பூஜையை விமரிசையாக கொண்டாட முதல்வர் சுவேந்து அதிகாரி

நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டிரோன் ஷோக்கள், லேசர் ஒளி காட்சி, கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

மாநிலம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலை காணப்படுகிறது.

இது குறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. முன்பு போல் கட்டுப்பாடு விதிக்காமல் அனுமதி வழங்கப்படுவதற்கு மாநில அரசுக்கு நன்றி தெரிவித்து சமூக ஊடகங்களில் வைரலாகியது. துர்கா பூஜையின் போது பாரம்பரிய மத நடைமுறைகளையும் ஆன்மிகத்தையும் கடைபிடிக்க வேண்டும்.

நல்லிணக்க உணர்வைப் பாதுகாக்குமாறு துர்கா பூஜை ஏற்பாட்டாளர்களை மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கேட்டுக்கொண்டார். கோல்கட்டாவில் துர்கா பூஜையைத் துவங்கி வைத்துப் பேசிய சுவேந்து அதிகாரி, ஆன்மிகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்; அன்னை துர்காவை சனாதன மரபுகளின் படி வழிபட வேண்டும் என தெரிவித்தார். அவர் துர்கா தேவியைப் போற்றும் துதிப்பாடல்களையும், ஸ்லோகங்களையும் வாசித்தார்.

Advertisement