சொத்து வரி சிறப்பு சலுகை

மதுரை: மதுரை மாநகராட்சியின் நுாறு வார்டு பகுதிகளில் 2026_ 2027 ஆண்டின் 2 ம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.31 க்குள் செலுத்தும் சொத்து வரி உரிமைதாரர்களுக்கு 5 சதவீதம் (அதிக பட்சமாக ரூ.5 ஆயிரம்) வழங்கப்படும். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொது மக்கள் சொத்து வரியை செலுத்த வசதியாக அக்டோபர் முழுவதும் சனிக்கிழமைகளில் (அரசு விடுமுறை தவிர்த்து) மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களும் செயல்படும். www.tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மூலமும் சொத்து வரியை செலுத்தி சிறப்பு சலுகையை பெறலாம் என கமிஷனர் கவுரவ் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement