தேர்தல் கமிஷனுக்கு எதிரான போராட்டம்: நிறுத்தியது 'இண்டி' கூட்டணி
புதுடில்லி:நாடு முழுதும் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர்., பணியை கண்டித்தும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர், தலைநகர் டில்லியில் சமீப காலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்திலும் அவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.இந்த சூழலில், இண்டி கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு, டில்லியில் உள்ள தன் வீட்டில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேற்று முன்தினம் தேநீர் விருந்து அளித்தார். அப்போது, துர்கா பூஜை, தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால், தேர்தல் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைப்பது என, முடிவு செய்யப்பட்டது. பண்டிகைகளை கொண்டாட அனைத்து தலைவர்களும், நிர்வாகிகளும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், டில்லியில் தினசரி போராட்டத்தை நடத்துவது சவாலாக இருக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நவ., 1ல், டில்லியில் காங்., சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடக்கிறது.
ராகுல் கூறியதாவது:
எங்களின் போராட்ட உத்தி மாறுமே தவிர, ஒருபோதும் நிற்காது. போராட்ட களம் தொடர்ந்து நீடிக்கும். ஜந்தர் மந்தரில் போராட தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் சட்ட ரீதியாக போராடுவோம். இந்த இடைவேளை, பின்வாங்கல் அல்ல. தேர்தல் கமிஷனுக்கு எதிரான சட்ட போராட்டம் வீரியத்துடன் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.
கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டவில்லை கதை தான்.