கரப்பான்களுக்கு அமெரிக்க நிதி: போட்டுடைத்த பிரபல பாடகி

43

- சிறப்பு நிருபர் -


டில்லியில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, கரப்பான்பூச்சி கட்சி சார்பிலும் போராட்டம் நடக்கிறது. தடையை மீறிய அக்கட்சியின் நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் உள்ளிட்டோர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவர் போர்வையில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான் கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வருவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல பாடகியும், நடிகையுமான மேரி மில்பென் கூறியதாவது:பிரதமர் மோடிக்கு எதிரான சில அமெரிக்க தொழிலதிபர்கள், கரப்பான் கட்சிக்கு நன்கொடை அளித்து போராட்டத்தை துாண்டி விடுகின்றனர். இந்த குறிப்பிட்ட வெளிநாட்டு நன்கொடையாளர்களுக்கு உலகம் முழுதும் ஒரு பொதுவான பாணி உள்ளது. உலகளவில் உறுதியான நிலைப்பாடு கொண்ட தலைவர்களை குறிவைப்பது. அந்த வகையில் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. இந்திய மக்களே, அஞ்சாதீர்கள். 25 ஆண்டுகளாக அரசு தலைமைப் பொறுப்பில் திறம்பட பணியாற்றி வரும் பிரதமர் மோடி, அமெரிக்காவின் சில தீயசக்திகளுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement